2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

காதலியின் தங்கையை வன்புணர்ந்த காதலன்

Editorial   / 2025 ஜூலை 22 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் தனியாக இருந்தபோது, 17 வயது சிறுமியை, அவரது அக்காவின் காதலன் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

அக்மீமன, வலஹண்டுவ பகுதியைச் சேர்ந்த 25 வயது சந்தேக நபர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றார். அவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவை   காதலித்து வந்தார். சம்பவதினம், அந்த நபர், பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு வந்திருந்தார்.

  அவரது அக்காவுடன் வீட்டில் இருந்த இருவரும், வெளியில் சென்றுவிட்டார். எனினும், சிறிது நேரத்தில் திரும்பி வந்து அந்த நபர், தனது மொபைல் போன் சார்ஜரை மறந்துவிட்டதாகக் கூறி, வீட்டில் தனியாக இருந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

  விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்தனர், பாதிக்கப்பட்ட சிறுமியை காலி கராப்பிட்டி போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தினர். அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.

சந்தேக நபர் காலி நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .