Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜூலை 01 , பி.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக ஜூலை 03ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணிவரை பாராளுமன்ற வளாகத்தில் வைப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 03ஆம் திகதி நடைபெறவிருந்த பாராளுமன்ற அமர்வை நடத்தாதிருக்கவும் ஆளும் கட்சி எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானம்
வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை நாளை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்நாளை (02) விவாதத்திற்கு எடுக்கப்படவிருந்த குறித்த தீர்மானம் பற்றிய விவாதத்தை நடத்தாதிருக்கவும் தீர்மானம்
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி அஞ்சலிக்காக புதன்கிழமை (03) பாராளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவருவதற்கு, இதன் காரணமாக அன்றையதினம் பாராளுமன்ற அமர்வை முன்னெடுக்காதிருப்பதற்கும் இன்று (01) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் ஆளும்-எதிர்க்கட்சியின் இணக்கப்பாட்டுடன் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
இதற்கு அமைய அவருடைய பூதவுடல் புதன்கிழமை (03) பி.ப 2.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை இறுதி அஞ்சலிக்காக பாராளுமன்ற கட்டடத்தின் முன்பக்கத்திலுள்ள ஒன்றுகூடல் மண்டபத்தில் வைக்கப்படவுள்ளது.
அதேநேரம், வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாளை (02) ஜனாதிபதியின் விசேட உரையை மாத்திரம் முன்வைப்பதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். இத்தீர்மானத்திற்கு அமைய அமைய நாளை (02) மற்றும் நாளைமறுதினம் (03) நடைபெறவிருந்த இது தொடர்பான தீர்மானம் குறித்த விவாதம் நடைபெறாது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்குபற்றலுடன் இன்று (01) பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவை பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago