2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

’புத்தக்கயாவை இந்து ஆலயமாக காட்ட முயற்சி’’

Editorial   / 2024 மார்ச் 20 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


 

பௌத்த மதத்தை சீரழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகள் நடப்பதாகவும், இதற்கு இடமளிக்காது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பௌத்த மதத்தை பாதுகாக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அரசியலமைப்பில் பௌத்த மதத்தின் பாதுகாப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி  பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எழுத்துமூலம் அரசாங்கத்திற்கு சில விடயங்களை அறிவித்துள்ளனர். பிக்குவை போன்ற வேடமிட்ட ஒருவர், அவரின் மகன் அமெரிக்காவில் வசிக்கின்றார். இந்த நபர் நாங்கள் இலங்கையில் ஏற்றுக்கொண்டுள்ள திரிபீடகத்தை தவறு என்று கூறியும், நாட்டின் பௌத்தர்கள் நம்பும் சில விடயங்களை நிராகரித்தும் கருத்துக்களை வெளியிடுகின்றார். உதாரணத்திற்கு புத்த பெருமான் இலங்கையில் பிறந்தார் என்று கூறிக்கொண்டு புத்தக்கயாவை இந்து ஆலயமாக காட்ட முயற்சிக்கின்றார். இந்தியாவில் இருக்கும் இந்து அடிப்படைவாதிகளுக்கும் புத்தகயாவை இந்து ஆலயமாக காட்ட வேண்டும் என்றே முயற்சிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .