Editorial / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
புரெவி புயலின் பாதை தொடர்பான படத்தை “ஸ்கைமெட்வெதர்” வெளியிட்டுள்ளது.

‘புரெவி புயல்’ இலங்கையின் கிழக்கு கரையை இன்றிரவு 7 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கடக்கும் என எதிர்பார்ப்பதாக, வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் உரையாற்றிய அமைச்சர் சமல் ராஜபக்ஷ, “ புயலின் தாக்கத்துக்கு முகங்கொடுக்கும் வகையிலான முன்னாயத்த நடவடிக்கையாக, மீனவர்களும் கடற்படையினரும் கிழக்கு கடலுக்குள் செல்லவேண்டாமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில், “மிகவும் விழிப்பாக இருக்குமாறு மக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்றும் தனதுரையில் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .