Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 23 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் அமைதியை தொடர்ந்தும் முன்னெடுக்கும் நோக்கில் சில பகுதிகளில் முப்படைகளை பயன்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன், நேற்று (22) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை், யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்கள் மற்றும் அதற்கு உட்பட்ட கற்பகுதிகளிலும் இந்த விசேட பாதுகாப்பு அமுலில் இருக்கும்.
அதற்கு மேலதிகமாக, கண்டி, மாத்தளை, கிளிநொச்சி, வவுனியா, குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்களிலும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அமுலில் இருக்கும் என, அந்த வர்த்தமானியில் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago