2025 மே 19, திங்கட்கிழமை

மஹிந்தவுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
 
அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் கடந்துள்ள போதிலும்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதான  குற்றச்சாட்டு குறித்த விசாரணைகள் இன்னும் நிறைவுப் பெறாமல் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X