Editorial / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற நிலைமை, நாட்டில் இருக்கிறதென தனிப்பட்ட முறையில் தான் நம்பிக்கை கொள்ளவில்லை எனத் தெரிவித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன், சகலரும் இணைந்து இதுதொடர்பில் தீர்மானம் எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்றத்தில் இன்று (05) கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது, கேள்விகளைக் கேட்டிருந்த அனுராபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, முதலில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமா? அல்லது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படுமா? அவ்வாறு நடத்தப்படுமாயின் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்படும் என்று வினவினார்.
அக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
17 minute ago
28 minute ago
35 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
35 minute ago
54 minute ago