2025 ஜூலை 21, திங்கட்கிழமை

மூடிய அறைக்குள் ரணில் - மோடி பேசியது என்ன?

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூடிய அறைக்குள் இரகசியப் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை பிரமதர் மேற்கொண்டிருந்த நிலையில், இந்த இரகசியப் பேச்சுவார்த்தை நேற்று(20) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றபோதிலும், என்ன கலந்துரையாடப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

நேற்றைய சந்திப்பின் பின்னர் ரணில் அல்லது மோடி இருவரும் ஊடகவியலாளர்களுக்கு எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .