Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜூலை 16 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசத்தைப் பாதுகாப்பதற்கு தமது ஆதரவை வழங்கினால், அவர்களின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை மீள இணைத்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஏனையவர்கள் நிராகரித்துள்ளனர்.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மற்றும் கட்சியின் பிரச்சார முகாமையாளர் சுஜீவ சேனசிங்க ஆகியோர், செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தனர். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
“தேசத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் அவருக்கு ஆதரவளித்தால் ஐக்கிய தேசியக் கட்சியில் எங்களின் உறுப்புரிமையை மீள இணைத்துக் கொள்ள ஜனாதிபதி முன்வந்துள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர மற்றும் ரோஹித அபேகுணவர்தன ஆகியோருடன் நாங்கள் மேடையில் இருக்க விரும்பாததால் இந்த வாய்ப்பை ஏற்க நாங்கள் தயாராக இல்லை” என பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.
“ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா என்ற குழப்பத்தில் ஜனாதிபதி இருப்பதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் முன்னர் கூறியது போல் பதினைந்து முதல் இருபது வரையிலான ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்களின் ஆதரவைப் பெற முடியாது. எவ்வாறாயினும், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம்,'' என்றார்.
டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, லலித் அத்துலத்ஜமுதலி மற்றும் காமினி திசாநாயக்க போன்ற மறைந்த ஐ.தே.க தலைவர்களின் அபிவிருத்தி பாணியை மீண்டும் ஒருமுறை ஐக்கிய மக்கள் சக்தி வெளிச்சத்துக்கு கொண்டுவரும் சேனசிங்க தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago