2025 மே 07, புதன்கிழமை

ரவிக்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்

Editorial   / 2021 மார்ச் 17 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இவர்களை, 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொடவத்த, மஞ்சுள திலகரத்ன மற்றும் மொஹமட் இர்ஷடீன் ஆகிய நீதிபதிகள் குழாமால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரிய ஜனசுந்தர, பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்ததையடுத்து, பிரதிவாதிகளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X