Editorial / 2025 நவம்பர் 11 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
முறையான முன்னறிவிப்பு இன்றி தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என சுட்டிக்காட்டிய முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா,சதிகளின் பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால் தன்னை எழுத்து மூலம் ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசீலிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
பொறியியலாளரது கட்டுப்பாட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின் கீழ் செயற்பட அனுமதிக்குமாறு கோரி யாழ் மாநகர சுகாதார சிற்றூழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (11) முன்னெடுத்தனர்.
யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (11 இடம்பெற்ற நிலையில் இது தொடர்பாக உறுப்பினர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
அனைத்து மாநகர, நகரசபைகளின் சுகாதார பகுதிகள் பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ் தான் இருந்து வருகிறது.
ஆனால் யாழ் மாநகரின் சுகாதார பிரிவு மட்டும் பொறியியலாளர் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் நாளாந்தம் பல்வேறு நடைமுறை பிரச்சினைகள் உருவாகி வருகிறது.
எனவே இவ்வாறு இருக்கும் நடைமுறையை மாற்றி பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ் கொண்டுவரல் வேண்டும்.
அத்துடன் ஊழியர்களது நிரந்தர நியமனம், இடமாற்றம், உழவு இயந்திர ஒப்பந்தங்கள் மூலம் வகைதெரியப்படும் திண்மக்கழிவுகள் பிரித்தால்கையில் இருக்கும் குழப்பங்கள் உள்ளிட்ட சில நடைமுறை பிரச்சனைகளுக்கு தீர்வு, கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி ஊழியர்கள் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
அவர்களது பிரச்சினைக்கு தீர்வை வழங்க மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
41 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago