2026 மார்ச் 23, திங்கட்கிழமை

வயிற்றில் அடித்த பாண், பணிஸ்

Janu   / 2026 மார்ச் 23 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி சிற்றுண்டிகளின் விலைகளையும் திங்கட்கிழமை (23) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

ரத்தொழுகமையில் அமைந்துள்ள அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (23) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜயவர்தன , இதற்கு முன்னர் மாவு விலை அதிகரித்த சந்தர்ப்பங்களை தவிர, ஏனைய சந்தர்ப்பங்களில் பாண் உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலைகளை தாம் அதிகரித்ததில்லை எனவும், தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் விலை மாத்திரமன்றி பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் விலைகளும் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .