Editorial / 2024 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது வரி குறைப்பை மேற்கொள்வது மிகவும் அபாயகரமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாவனல்லை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிலர் வரி குறைப்பை மேற்கொள்வதாகப் பிரசாரம் செய்கின்றனர். மாற்று வரிகளின்றி நாட்டை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். அவர்கள் பாலத்தை உடைத்துக் கொண்டு பயணிக்குமாறு கூறுகின்றனர். பாலத்தை உடைத்துக் கொண்டு பயணித்தால் அனைவரும் ஆற்றில் விழ நேரிடும்.
தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் உள்ள திட்டங்களைச் செயற்படுத்தினால் நாட்டுக்கு சுமார் 200 பில்லியன் ரூபா இல்லாது போகும்.
வரிகளைக் குறைத்து அதிக சலுகைகள் தருவதாகக் கூறுபவர்களுக்கு அடிப்படை கணிதம் கூட தெரியாது என்றே கூற வேண்டும் என்றார். (a)

2 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
25 Oct 2025