2025 ஜூலை 19, சனிக்கிழமை

வழமைக்கு திரும்புகிறது இலங்கையின் பொருளாதாரம்

Editorial   / 2020 பெப்ரவரி 08 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலின் பின்பு இலங்கையின் பொருளாதாரம் வழமைக்கு திருப்பியுள்ளதென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. 

சுற்றுலாத்துறையின் மேம்பாட்டின் உதவியுடன் இவ்வருடத்தின் தற்போது வரையான காலப்பகுதியில் இலங்கையின் பெருளாதாரம் 3.7 வீத வளர்ச்சியை காண்பிப்பதாகவும் குறித்த நிதியம் அறிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், சீனா உள்ளிட்ட நாடுகளில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்குதல் போன்ற தொற்றுநோய்த் தாக்கம் காரணமாக சில தாக்கங்கள் பொருளாதாரத்தின் மீது ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதெனவும் தெரிவிக்கபடுகிறது.

நிலையான உற்பத்திகள் மீதான மத்திய வங்கியின் அபிவிருத்தி இலக்குகளின் பிரகாரம்  பணவீக்கம் 4.5 வீதமாக காணப்படுகின்றதெனவும் நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.

2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இறக்குமதி மட்டப்படுத்தப்பட்ட காரணத்தால் உள்ளக உற்பத்திகள் 3 வீத வளர்ச்சி இலங்கை அடைந்துள்ளனவெனவும் நிதியம் குறிப்பிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X