2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் ஐவர் பலி

Editorial   / 2019 ஜூன் 19 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் வெலிக்கந்த செவனப்பிட்டிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

உழவு இயந்திரமொன்றும் வானொன்றும் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், உழவு இயந்திரத்திரத்தில் பயணித்த போஅத்த கிராமத்தைச் சேர்ந்த 29 வயதான நபர் ஒருவரும் 30,35,55,60 வயதுடைய பெண்களுமே உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற குறித்த வான் உழவு இயந்திரத்தின் பின்னால் மோதியதால், சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு உழவு இயந்திரம் இழுத்துச் செல்லப்பட்டு, வர்த்தக நிலையமொன்றில் மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இச்சம்பவத்தையடுத்து, வானின் சாரதி வெலிக்கந்த பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X