2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

விமான நிலையத்தில் பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை

Freelancer   / 2022 ஜூலை 12 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க வானுார்தி நிலையத்துக்கு சென்றபோது, அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு குடிவரவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இதன்போது குடிவரவு அதிகாரிகள், தமது கடமைகளை புறக்கணித்தமையை அடுத்து, பசில் ராஜபக்ச மீண்டும் நாட்டுக்குள் திரும்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .