2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

வெலிக்கடை கலவரம்; எமில் ரஞ்சனுக்கு மரண தண்டனை

Freelancer   / 2022 ஜனவரி 12 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், இன்று (12)  தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதிபதிகளான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலக்கரத்ன ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய விசேட நீதிமன்ற தீர்ப்பாயமே இந்த தீர்ப்பை வழங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .