Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட க.பொ.த. சாதாரண தர பரீட்சாத்திகளுக்கான போக்குவரத்து வசதிகளை இராணுவத்தினர் செய்துகொடுத்துள்ளனர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படையின் கீழுள்ள 7ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 6ஆவது இலங்கை சிங்க படையணியைச் சேரந்த படையினரால் இன்று (06) இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 150 மாணவர்களை படையினர் உழவு இயந்திரம் மற்றும் படகு ஆகியவற்றை பயன்படுத்தி இந்து கல்லூரி மற்றும் தர்மபுரம் உள்ளிட்ட பரீட்சை நிலையங்களுக்கு பாதுகாப்பான முறையில் உரிய நேரத்தில் கொண்டு சேர்த்தனர்.
அதேவேளை,வெள்ளத்தினால் பாதிப்புற்ற குறித்த இரண்டு பாடசாலைகளிலுள்ள தளபாடங்களை அகற்றுவதற்காக படையினர் தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்கினர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய , 57ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் அதன் கீழுள்ள ஏனைய படைத் தலைமையகங்கள் உட்பட அனைவரும் இந்த நடவடிகைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago