Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தால் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, இந்தியாவின் தி ஹிந்து ஆங்கில ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார்.
குறித்த திருத்தமானது வெற்றியளிக்காத ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அரசிலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும், அதிலுள்ள சில விடயங்கள் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கவேண்டும் என்ற விடயத்தை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது என்றும், இதற்கான மாற்று வழியொன்றை யோசிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகப்பட்ட அதிகார பரவலாக்கல் என்ற விடயத்தை நிறைவேற்றுவதில் பெரும்பான்மை (சிங்கள) மக்களுக்கு விரும்பம் இல்லையென்றும், அவ்வாறு செயற்படுவது அவர்களின் விருப்பத்துக்கு மாறானது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
எனினும், பிரசேதங்களுக்கான அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எந்தவித எதிர்ப்புகளும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தான் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் 5 வருடங்களின் பின்னர் ஆராய்ந்து பார்க்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேசிய பாதுகாப்பு விவகாரங்களில், குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்த இஸ்லாமிய அரசின் அச்சுறுத்தல் குறித்து இந்தியாவுடன் அதிக ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிகாரங்களை மாற்றுவது "விவாதிக்கப்பட வேண்டும்" என்றாலும், 19 வது திருத்தம் ஒரு "தோல்வி" என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஜனாதிபதி அது அகற்றப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். வேண்டும்.
“நீங்கள் குடும்பத்தில் டெர்மினேட்டர் என்று அழைக்கப்படுவது உண்மையா?”என, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, “சிறுவயதில் எது குடும்பத்தில் அப்பாவியான சிறுவன் நான். இராணுவத்தில் நான் இணைந்த போது,எனது சகோதரர் மஹிந்த இராணுவத்தில் சேர்ந்திருக்க வேண்டும் என்றும், நான் அரசியலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்றே குடும்பத்தினர் கூறினார்கள்” என்றார்.
48 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago