2025 ஜூலை 21, திங்கட்கிழமை

‘19இல் சிக்கல் இருப்பின் திருத்தத் தயார்’

Editorial   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தில், ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களை பாதுகாத்து, பலப்படுத்தி அரசியல் ரீதியில் பிரச்சினைக்குரிய விடயங்களுக்கான திருத்தங்களை நாடாளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், 2015 ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தனது தலைமையிலான அயராத முயற்சியின் பெறுபேறாகவே, மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய சிக்கல் நிலைமைக்கு தீர்வாக இலங்கை அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த திருத்தச்சட்டத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியிலான நிறுவனக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான பெறுபேறுகளை எமது சமூகம் பெற்றுக்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அவை எமது நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் பெற்றுக்கொண்ட உண்மையான வெற்றியாக அமையும் அதேவேளை, தாய் நாட்டின் நவீன யுகத்தை நோக்கிய பயணத்துக்கு இன்றியமையாததாகும்.

எனவே, 19 ஆவது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின் இலங்கை அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களை பாதுகாத்து, பலப்படுத்தி அரசியல் ரீதியில் பிரச்சினைக்குரிய விடயங்களுக்கான திருத்தங்களை நாடாளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ள தான் அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X