2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

‘22’க்கு ஆணி அடித்தார் விஜயதாஸ

Editorial   / 2024 ஜூலை 18 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை வெளியிட வேண்டாம் என நீதித்துறை சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அமைச்சின் செயலாளருக்கு வியாழக்கிழமை (18)  பணிப்புரை விடுத்துள்ளார்.

இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் அண்மையில் கிடைத்தது.

இது தொடர்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கேட்டபோது, ​​ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால், அந்த அச்சத்தைப் போக்கவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறேன் என்றார்.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் அவசர அவசரமாக இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சிப்பதாக எதிர்க்கட்சி அண்மையில் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .