Simrith / 2024 மார்ச் 24 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
McDonald's வர்த்தக நாமத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர்களது உடன்படிக்கைகளில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பில் ஆதார நிறுவனம் முறைப்பாடு செய்ததை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்டொனால்ட் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், பெயர் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் சமூக ஊடக பாவனையாளர்கள் பலரும் பதிவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .