2025 மே 07, புதன்கிழமை

O/L தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

Nirosh   / 2020 நவம்பர் 28 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமைகள் தொடருமாக இருந்தால், கல்வி பொதுத் தரா தர சாதாரணத் தரப் பரீட்சை மேலும் காலந்தாழ்த்தப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில், ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டாரவின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சாதாரணத் தரப் பரீட்சை தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனவரி 18 - 27ஆம் திகதிகளில் நடத்துவதுத் தொடர்பான இறுதித் தீர்மானம் ஒருவாரத்தில் அறிவிக்கப்படுமெனவும் 
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X