2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டலும் முத்திரை வெளியீடும்

Freelancer   / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் புனித நீர் தடாக திறப்பும் தியான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டலும் முத்திரை வெளியீடும் நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது. 

  ஆலய அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் தினேஸ் குணவர்தன கலந்துகொண்டார்.

 சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.பி.ரட்ணாயக்க, யதாமினி குணவர்தன இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உதவித்தூதுவர் டாக்டர் திருமதி எஸ்.அதிரா ஆகியோரும் கலந்துகொண்டர்.

 நுவரெலியா டெல்லி ரோட்டறி கழக உறுப்பினர்களும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்களும் பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.தியான மண்டபத்திற்கான அனுசரனையை டெல்லியை சேர்ந்த பிரதீப் ஜெய்ன் குடுப்பத்தினர் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. டி.ஷங்கீதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X