Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 23 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
செம்மணி மண்ணில் புதையுண்டு போன உறவுகளுக்கு, நீதி வேண்டியே'அணையா தீபம்" என்ற பெயரில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர் தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள் எதுவும் இதுவரை கிடைக்காத நிலையில் குறித்த விடயத்தை சர்வதேச பார்வைக்கு கொண்டு செல்வதோடு அதனூடாக உறவுகளுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தும் வகையில் மக்கள் இந்த 'அணையா தீபம்' போராட்டத்தை திங்கட்கிழமை (23) அன்று செம்மணியில் 1996 களில் சருகாகிப் போன கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஷ்ணவி சண்முகநாதன் தலைமையில்,முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் சமயத் தலைவர்கள்,அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
திங்கட்கிழமை (23) அன்று காலை 10.10 மணி அளவில் ஆரம்பிக்கப்பட இவ் போராட்டமானது 23,24,25 ஆகிய 3 நாட்களுக்கு அகிம்சை வழியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ். வருகை தரவுள்ள ஐ.நா உயர் அதிகாரியின் பார்வைக்கு பிரச்சினையின் ஆழத்தை வலியுறுத்துவதற்காக இப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
பு.கஜிந்தன்
53 minute ago
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
16 Oct 2025