2025 மே 24, சனிக்கிழமை

ஆச்சினா…ஆச்சித்தான்…

Kogilavani   / 2017 மார்ச் 06 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை, கோட்டகொட பெருந்தோட்டத்தில், ஐந்தாவது தலைமுறையைக் கண்ட தெய்வானை என்ற பெண்ணையே படத்தில் காண்கின்றீர்கள்.

இவருக்கு தற்போது 103 வயதாகின்றது. இவர், தற்போது ஐந்தாவது பரம்பரையைக் காணும் பாக்கியத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருக்கு 7 பிள்ளைகளும் 45 பேரப்பிள்ளைகளும், 15 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர்.

தெய்வானை, 1914ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி, இந்தியா, புதுக்கோட்டை மாவட்டத்தில், இராமசாமி தம்பதிகளுக்கு மகளாக  பிறந்து, நான்கு வயதில் பெற்றோருடன், பெரிய கங்காணிமாரின் துணையுடன் பதுளைப் பகுதிக்கு வந்துள்ளார். (படம்: எம்.செல்வரஜா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X