Editorial / 2019 ஜனவரி 28 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல் , கனகராசா சரவணன்
தேசிய வீடமைப்பு அதிகார சபையால், மட்டக்களப்பு - போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டக் கிராமத்தில், புதிதாக அமைக்கப்பட்ட 25 வீடுகளைக் கொண்ட “ஆனந்தபுரம்” எனும் மாதிரிக் கிராமம், உத்தியோகபூர்வமாக மக்களிடம் இன்று (28) கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, இவ்வீடுகளை, மக்களிடம் கையளித்தார்.
இந்த மாதிரிக் கிராமம், செமட்ட செவன திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள 161ஆவது மாதிரிக் கிராமமாகும்.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுபபினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பார் சோ.கணேசமூர்த்தி உள்ளிட்டோரும் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.




19 minute ago
26 minute ago
37 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
37 minute ago
47 minute ago