2025 மே 21, புதன்கிழமை

இந்திய இராணுவத்தினருக்கு யாழில் அஞ்சலி

Editorial   / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று  (15) பலாலியில் அமைந்துள்ள இந்திய இராணுவவீரர்கள் நினைவுத்தூபிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக கொன்சிலர் ஜெனரல் ஆர் நடராஜன், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  

யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினர், அமைதிப்படை எனும் பெயரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தபோது, ஒக்டோபர் 12ஆம் திகதி நள்ளிரவு, விமானத்தில் இருந்து பரசூட் மூலம் தரையிறங்க முற்பட்ட வேளை, விடுதலைப்புலிகளால் நடுவானில் வைத்துச் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .