2025 மே 15, வியாழக்கிழமை

இந்திய விஜயம்...

Editorial   / 2021 செப்டெம்பர் 05 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஆயுதப்படைகளின் ஆளுமை வளர்ச்சி உட்பட ஒட்டுமொத்த ஆளுமை விருத்தியினை நோக்கி ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் முகமாக  பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அலுவலர்கள் கல்லூரியைச் சேர்ந்த இலங்கை ஆயுத படைகளின் பிரதிநிதிகள் குழுவொன்றுக்கு இந்தியாவுக்கான சர்வதேச  கூட்டிணைவு விஜயம் ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

39 அதிகாரிகளை உள்ளடக்கிய இந்த குழு புதுடில்லியில் உள்ள முப்படை தலைமையகங்கள் அவற்றின் செயற்பாடுகளை அறிந்துகொள்வது மாத்திரமன்றி முப்படைகளின் கள ரீதியான செயற்பாடுகளை பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த விஜயத்தின்போது ஆயுதப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடனான பல்வேறு சந்திப்புக்கள் கைத்தொழில் மற்றும் கலாசார நிலையங்களுக்கான விஜயங்கள் ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கான இந்த விஜயமானது கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .