Mayu / 2024 மார்ச் 26 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி.சகாதேவராஜா
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின்மீதான நிருவாக அடாவடித்தனத்திற்கு எதிராக நீதி கோரி நடாத்தும் மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்கள் அரச சேவைகளை பெறும் அடிப்படை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால் பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டு வருவதுடன் அண்மைக்காலமாக இருக்கும் அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் வருகின்றன. என்று சொன்னார்கள்.
பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பெறுவதற்கும் இயங்கிக் கொண்டிருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அரச அதிகாரங்களை பெற்று மக்களுக்கான அரச சேவையை பெறுவதற்கு முடியாமல் கடந்த 30 வருடங்களாக தவித்துக்கொண்டிருக்கிறோம் என ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago