Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
Princiya Dixci / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிராந்திய மத்திய இரத்த வங்கியினை, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின, நேற்று (02) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வு, வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு. அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இரண்டு நாள் விஜயமாக வடக்குக்கு வருகை தந்த சுகாதார அமைச்சர் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் பார்வையிடவுள்ளதுடன், கலந்துரையாடவும் உள்ளார்.
இவ்விஜயத்தில் முதலாவது நிகழ்வாகவே, இந்த இரத்த வங்கி, வவுனியா பொது வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சி. சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி. லிங்கநாதன், ஏ. ஜெயதிலக, செ. மயூரன் உட்பட சுகாதார திணைக்கள அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
58 minute ago