Janu / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரிய குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மியோன் லீ (Miyon LEE) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் அண்மையில் (03) சந்தித்தார்.

பரஸ்பர நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில், இலங்கையின் விவசாயத்துறையுடன் தொடர்புபட்ட ஆய்வு மற்றும் அபிவிருத்திகளுக்கு ஆதரவளிப்பது பற்றிய தூதுவர் வலியுறுத்தினார்.

அத்துடன், KOICA மூலம் வழங்கப்படும் ஆதரவுகள், கல்விக்கான ஆதரவுகள், போக்குவரத்து, நீர் முகாமைத்துவம் மற்றும் சுகாதாரம் போன்று கிராமப்புற அபிவிருத்தி என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்னவும் இதன்போது கலந்துகொண்டார்.



41 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
52 minute ago
59 minute ago
1 hours ago