2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உணவுக்கூடம் திறப்பு...

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மணிமேகலை உணவுக்கூடத்தை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று செவ்வாய்க்கிழமை (28) திறந்து வைத்தார்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தலைவர் கா.ஆ.தியாகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆசியுரைகளை, நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய ஆதீன குருக்களான சிவஸ்ரீ சம்பு மகேஸ்வர குருக்கள், கைலை வாமதேவ குருக்கள், பா.பாலகணேஸ்வர குருக்கள், ப.முத்துக்குமாரசாமி குருக்கள் மற்றும் நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸதேரோ ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக, வேலணை பிரதேச செயலாளர் சுகுணாவதி தெய்வேந்திரம், வேலணை முன்னாள் பிரதேச செயலாளர் மஞ்சுளா சதீஸன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி.விசாகரூபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலயத்தில் இவ்வளவு காலமும் திருமண மண்டபத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இனிவரும் காலங்களில் இந்தப் புதிய உணவுக்கூடத்தில் அன்னதானம் வழங்கப்படும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

(படப்பிடிப்பு: குணசேகரன் சுரேன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .