2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உரசிக்கொண்ட பஸ்கள்...

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (27) காலை இரண்டு பஸ்கள், ஒன்றோடு ஒன்று உரசி விபத்துக்குள்ளானதில் மட்டக்களப்பு-கல்முனைக்கான போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டிருந்தது.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த இரண்டு பஸ்களில் ஒரு மஞ்சந்தொடுவாய் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருள் நிரப்புவதற்குச் செல்ல முற்பட்ட வேளையில் பின்னால் வந்த பஸ் மோதி உரசிக் கொண்டதால் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த இரு பஸ்களும் சிறு சேதத்துக்குள்ளாகிய போதிலும், இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.(படப்பிடிப்பு: ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .