2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு...

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை தேசிய சமாதானப் பேரவையினால் கொரோனாத் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அப் பேரவையின் மாவட்ட சர்வமதக் குழு இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.



இவ் உலருணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு நேற்றைய தினம் (11)
வழங்கிவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



இதேவேளை இப் பேரவையினால் ஏறாவூர் நகர சபைக்கும் தொற்று நீக்கி தெளி கருவியும், பாதுகாப்பு அங்கிகளும் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .