Editorial / 2025 நவம்பர் 21 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

தாயக மண் மீட்பு போரிலே தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான முன்னாயத்த பணிகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகிறது
அந்த வகையில் முல்லைத்தீவு சுற்றுவட்டப் பகுதி உள்ளிட்ட நகர் பகுதி சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் பணி நாளை அனுஷ்டிக்க தயாராகி வருகிறது.
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ் மக்களாவ் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. அந்த வகையில் முல்லைத்தீவு நகர் பகுதியை அலங்கரிக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
சண்முகம் தவசீலன்




22 minute ago
25 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
25 minute ago
28 minute ago