Janu / 2026 ஏப்ரல் 23 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘எஹிபஸ்ஸிகோ’ (Ehipassiko) சமாதான நடைபயணத்தின் மூன்றாவது நாள் வியாழக்கிழமை (23) அன்று, வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அலுவிஹாரை வளாகத்திலிருந்து ஆரம்பமானது.
இந்த நடைபயணம் வரலாற்றுப் புகழ்பெற்ற கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை நோக்கி பயணிக்கவுள்ளது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவினர், கடந்த 21ஆம் திகதி அனுராதபுரத்தில் இந்த நடைபயணத்தை ஆரம்பித்தனர். புதன்கிழமை (22)அன்று இரண்டாவது நாளாக தம்புள்ளையில் ஆரம்பமான நடைபயணம், வரலாற்றுச் சிறப்புமிக்க மாத்தளை அலுவிஹாரை ரஜமஹா விகாரையை சென்றடைந்தது.
அரச அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைபயணம் ஏப்ரல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பிக்குகளுடன் இணைந்து ‘ஆலோகா’ (Aloka) எனும் செல்லப் பிராணியும் இந்த நடைபயணத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















36 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago