Editorial / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்
திருகோணமலை மாவட்ட மலேரியா ஒழிப்புப் பிரிவில், தெளி கருவி இயக்குநர்களாக பல வருட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் சுமார் 30 ஊழியர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வு, கிழக்கு மாகாண தெளி கருவி இயக்குநர் இயக்கத்தின் ஏற்பாட்டில், திருகோணமலையில் உள்ள மாகாண சுகாதார சேவைகள் பணிமனை மண்டபத்தில் இன்று (01) நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் கலந்துகொண்டார்.
இதில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டீ.ஜீ.எம்.கொஸ்தா, பிரதி பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் வீ.பிரேமானந்த், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் என்.சரவணபவன், பிராந்திய மலேரியா தடுப்பு பிரிவு வைத்தியர் பீ.உசாந்தினி, வைத்தியர் டி.நிலோஜன் மற்றும் தொற்றா நோய் பிரிவு வைத்தியர் எம்.எம்.எம்.முனாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago