Editorial / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் நேற்று (20) காலை,பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நவீன ஓவியம் பற்றிய புரிதலை ஏற்படுத்தலை நோக்காகக் கொண்டு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் ஓவியக்கண்காட்சி நடாத்தப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நவீன ஓவியம் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் வகையில் பிரதேச செயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சௌ.நேசராஜா, மாவட்ட கலாசார இணைப்பாளரும் கோரளைப்பற்று பதில் கலாச்சார உத்தியோகத்தருமான த.மலர்ச்செல்வன், ஓவியர் மதிதியேஸ் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள்,பொதுமககள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் பயிலும் ஐந்து மாணவர்களின் படைப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு -கே.எல்.ரி.யுதாஜித், vk;.vk;.m`kl; mdhk;)














15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025