Mayu / 2024 மே 29 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஓவியக் கண்காட்சி புதன்கிழமை (29) இடம்பெற்றது.
இந்த ஓவியக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களினால் வரையப்பட்ட புகைத்தல் மற்றும் போதை வஸ்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக விழிப்பூட்டும் வகையில் இந்த ஓவியக் கண்காட்சி இடம்பெற்றது.

இதில் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள 12 பாடசாலை களைச் சேர்ந்த 350க்கு மேற்பட்ட மாணவர்களின் ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தன.
காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு கலாசார பிரிவு மற்றும் சிறுவர் மகளிர் பிரிவு என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஓவியக் கண்காட்சியினை காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சில்மியா உட்பட கணக்காளர் பிரதி திட்டமிட பணிப்பாளர் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


11 minute ago
27 minute ago
30 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
30 minute ago
50 minute ago