2025 மே 19, திங்கட்கிழமை

கனவு நனவானது….

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018 ஆகஸ்ட் 02ஆம் திகதி ”எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பொலன்னறுவை றோயல் கல்லூரியின் கிரிக்கட் மைதானத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வின் போது அக்கல்லூரியில் தரம் 09 இல் கல்வி கற்கும் ஷாலிக்க லக்ஷான் என்ற மாணவன் ஜனாதிபதி முன்னிலையில் கதை ஒன்றை கூறினார்.

மிக அழகிய முறையில் அக்கதையை கூறிய மாணவனை தன்னிடம் அழைத்த ஜனாதிபதி அவர்கள், அவனது திறமையை பாராட்டி, அவனது தேவைகளை கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து மாணவனின் கோரிக்கைக்கேற்ப 2018 ஆகஸ்ட் 04ஆம் திகதி பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்திற்கருகில் கனங்கொல்ல புதிய நகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மூன்று பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை கவனித்துகொண்டு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவரும் கே.ஆர்.ஜயதிலக்க உள்ளிட்ட குடும்பத்தின் நிலைமைகளை நேரில் கண்டறிந்ததுடன், பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அவர்களது வீட்டை துரிதமாக முழுமைப்படுத்தித் தருவதாக உறுதியளித்தார். 

அந்த வகையில் எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மற்றும் ஒரு மக்கள் பணியாக ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரில் ஷாலிக்க லக்ஷான் என்ற மாணவனின் வீடு துரிதமாக முழுமையான ஒரு வீடாக நிர்மாணிக்கப்பட்டு நேற்று (08)  பிற்பகல் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X