2025 மே 19, திங்கட்கிழமை

கரை வலையில்...

Editorial   / 2018 நவம்பர் 25 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.இர்ஷாத்

அம்பாறை மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக மீன்பிடித் தொழில் வெகுவாகப் பாதிப்படைந்துள்ள நிலையில், பாலமுனைப் பிரதேசத்தில், சில மீனவர்களின் வலையில் சுமார் மூவாயிரம் பாரை மீன்கள் இன்று (25) சிக்கியுள்ளன.

கடந்த மூன்று வருடங்களுக்குப் பின்னர் கரைவலைகளில் இவ்வாறு பாரிய தொகை பாரை ரக மீன்கள் பிடிக்கப்பட்டமை​ இதுவே முதற்தடவையாகும் என, மீனவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு, வலைகளில் அகப்பட்ட பாரை மீன்கள் ஒவ்வொன்றும் சுமார் ஐந்து கிலோகிராம் எடை கொண்டதாகும். இம்மீன்கள் சுமார் 05 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு விற்பனை செய்யலாம் என, மதிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X