Editorial / 2020 ஜனவரி 10 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று முக்கியத்துவமிக்க களனி ரஜமஹா விஹாரையின் வருடாந்த துருத்து மஹா பெரஹரா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், நேற்று (09) இரவு இடம்பெற்றது.
சமயக் கிரியைகளைத் தொடர்ந்து, புனித தந்தம் அடங்கிய பேழையை, புனித தந்தத்தைச் சுமந்துவரும் யானையின் மீது ஜனாதிபதி வைத்தார்.
சமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க, இசுற ஜயக்கொடி, இந்திக்க அனுருத்த மற்றும் பிரசன்ன ரணவீர, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும், இந்த சமயக் கிரியைகளில் பங்குபற்றினர்.
களனி ரஜமஹா விஹாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கொள்ளுபிட்டியே மஹிந்த சங்க ரக்கித தேரரின் அனுசாசன உரை இடம்பெற்றதுடன், சமயக் கிரியைகளில் விகாரையின் நிர்வாக சபைத் தலைவர் வைத்தியர் சமன் வீரசிங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.











28 minute ago
35 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
35 minute ago
8 hours ago