Freelancer / 2023 ஜூலை 17 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்

சம்பளம் மற்றும் ஊழியர் நலன்புரி நிதியை உரிய முறையில் வழங்குமாறு கோரி கொத்மலை, ரம்பொட, ஆர்.பி.தோட்டத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (16) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


பல மாதங்களாக தமக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், தொழிலாளர் கொடுப்பனவுகள் மற்றும் தொழிலாளர் நம்பிக்கை நிதிகள் முறையாக வழங்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


நுவரெலியா கண்டி பிரதான வீதியின் ரம்பொட, புளூங்பீல்ட் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago