2025 ஜூலை 24, வியாழக்கிழமை

கிளிநொச்சியில் இயக்குநர் இமயம் பாரதிராஜா...

Kogilavani   / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என்.நிபோஜன்

 

லண்டன் கற்பக விநாயகர் ஆலய அறக்கட்டளையின் நிதி அனுசரணையில், கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு, கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நடத்திய இலவச கணினி கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு,  நேற்று நடைபெற்றது.

வடமாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தென்னிந்திய திரைப்பட இயக்குநர்  “இயக்குநர் இமயம்” பாரதிராஜா ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டார்.

பயிற்சியை நிறைவுசெய்த 130 மாணவர்களுக்கு, சான்றிதழ்கள் இயக்குநர் இமயத்தால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .