2025 மே 17, சனிக்கிழமை

கிழக்கில் ஆழிப்பேரலை அஞ்சலி

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக, கிழக்கு மாகாணம், அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்டது. இதன் அஞ்சலி நிகழ்வுகள், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில், இன்று (26) உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

திருச்செந்தூர் சுனாமி நினைவுத்தூபியில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் வழிபாடுகள் நடத்தப்பட்டு, இப்பிரதேசத்தில் உயிரிழந்த 243 பேரின் திருவுருவப்படங்களுக்கு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அம்பாறை - திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் உயிர்நீத்த 598 பேருக்காக, திருக்கோவில் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தால், திருக்கோவில் பொது விளையாட்டு மைதானத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

திருகோணமலை, மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான் விபுலானந்தர் வித்தியாலயத்திலும், நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

சுனாமியில் பலியான பாலசுகுமார் அனாமிகாவின் நினைவாகப் பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகளும் இதன்போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள்: வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான், க.விஜயரெத்தினம், சகா, எம்.ஏ.றமீஸ், எஸ்.கார்த்திகேசு, பொன்ஆனந்தம், அ.அச்சுதன், ஏ.எம்.ஏ.பரீத்)

மட்டக்களப்பு

அம்பாறை

திருகோணமலை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .