Mayu / 2025 ஜனவரி 08 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து மாவீரர் தினத்தில் தமது பிள்ளைகளுக்கான நினைவேந்தலை சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கையெழுத்து போராட்டம் புதன்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது

தேராவில் மாவீரர் துயிலுமில்ல பணிக் குழு உறுப்பினர்கள் மாவீரர்கள் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் இணைந்து குறித்த கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்

தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தின் காணியின் பெரும்பகுதி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில் அந்த அபகரிக்கப்பட்ட துயிலுமில்ல காணிக்கு முன்பாக குறித்த கையெழுத்து போராட்டம் முன்னேடுக்கப்பட்டது.
சண்முகம் தவசீலன்
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025