2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

குடைசாய்ந்தது கார்…

Princiya Dixci   / 2017 மே 01 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம், இன்று திங்கட்கிழமை (01) மதியம் 1 மணியளவில் ஊர்காவற்துறை பண்ணை வீதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் காரை ஓட்டிச் சென்ற சாரதியும் அவருடன் சேர்ந்து பயணித்த மேலும் ஒருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

முன்பக்க சக்கரத்தில் காற்று போனதால், கட்டுப்பாட்டை இழந்த கார், வீதியின் தடைக்கல்லுடன் மோதுண்டு குடைசாய்ந்ததாக, யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: செல்வநாயகம் கபிலன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .