2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

குப்பைகளை கொட்டுவதற்கு பலமுனையில் எதிர்ப்பு

Kogilavani   / 2017 ஏப்ரல் 18 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு உள்ளிட்ட நகர்புறங்களில் சேகரிப்படும் குப்பைகளை தமது பிரதேசங்களில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொட்டிகாவத்தை, மாளிகாவத்தை, வெலிசறை ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள்  இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கொலன்னாவையில் சேகரிக்கப்படும் குப்பைகளை, தமது பிரதேசத்துக்கு கொண்டுவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொடிகாவத்தை பிரதேச மக்கள், இன்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பு-அவிசாவளை வீதயில்,  டயர்களை எரித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இந்நிலையில் பொலிஸாரின் தலையீட்டையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வார்ப்பாட்டத்தில், கொடிகாவத்த முல்லேரியா பிரதேச சபையின் முள்ளாள் உறுப்பினர் நாலக ராமநாயக்கவும் பங்கேற்றிருந்தார்.

இதேவேளை, கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை  தமது பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொம்பே பிரதேச மக்கள், கிரிதிவெல, மாளிகாவத்த விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை, வத்தளை பிரதேசத்தில் சேகரிப்படும் குப்பைகளை, முகத்துவாரம் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச மக்கள் வெலிசறை- தொடுபல வீதி, ஜாகோப் மாவத்தைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, குப்பைகளை கொட்டுவதற்காக வந்த இரண்டு டிரக்டர் வண்டிகளை மக்கள் திருப்பியனுப்பியுள்ளனர்.

இதேவேளை,  ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைத்தந்த அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் விஜயத்துக்கும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

அவிசாவளையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை படங்களில் காணலாம் (படப்பிடிப்பு: வருண வன்னியாராய்ச்சி)

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .