Kogilavani / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 07:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்
நுவரெலியா உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி, விக்டோரியா பூங்காவுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில், பதுளையைச் சேர்ந்த நயினா முகமது அய்ரூப நிசா (55 வயது) என்ற பெண் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொரலாந்தையிலிருந்து நுவரெலியாவுக்கு பயணித்த தனியார் பஸ்ஸும் பதுளையிலிருந்து நுவரெலியாவுக்கு வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாகவும் விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மேற்படி பெண்ணின் கணவர், மகன் மற்றும் முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago